Pages

Saturday, January 20, 2018

அருவி

அருவி




அண்மையில் வெளிவந்து பல பாராட்டுகளை குவித்த அழகான திரைக்காவியம். யதார்த்தங்களையும் உண்மைகளையும் படம் பிடித்து காட்டிய படம்.ஒரு காட்சியில் வாழ்கையில் எது சந்தோசம் என்று அருவி பேசும் அந்த வசனம், எத்தனையோ கைத்தட்டலை வாங்கி உள்ளது. 

எப்போதும் சொல்வதைப்போல விமர்சனம் செய்யும் அளவுக்கு எல்லாம் எனக்கு விவரம் போதாது. ஆனாலும் இந்த படம் சொன்ன பாடம் ஒன்றை நான் பதிவு செய்தே ஆக வேண்டும்.

படத்தில் ஒரு காட்சி. பீட்டர் என்று ஒரு  கதாபாத்திரம் ஒரு கதை சொல்கிறான்.

"ஓர் ஊரில் ஒரு நாட்டாமை..
செய்யாத செயலொன்றை 
செய்தார் என சொல்லி 
ஊரும் உறவும் ஒதுக்கிட..
தனிமை தேடி போனாராம்..
தனித்து வாழ துணிந்தாராம்..

துணிந்து வாழ்ந்த மனிதன்
முதுமை காலம் வரவே
தளர்ந்து போய் நின்றாராம்..
வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி
வாழ்ந்து கெட்ட மனிதன் பாவம்
தவித்து போய் நின்றாராம்..
ஒட்டு மொத்த சோகத்தையும் 
ஏட்டில் எழுதி வைத்து
ஊருக்கெல்லாம் அனுப்பி விட்டு 
தனிமையில் வாழ்வை தொடர்ந்தாராம்...

ஊருக்கெல்லாம் போன தந்தி
ஒரு நல்லவன் கையிலும் சேர்ந்ததுவாம்..
சேதி படித்த மறுகணமே
அந்த நல்லவர் வாழ்ந்த வாழ்வை எண்ணி
இந்த நல்லவன் உறுகி போனானாம்..

நல்லா வாழ்த்த மனிதன் 
தனித்து துயரில் மடிவதை 
இந்த நல்லவன் மனது ஏற்கலையே..
ஊரை ஒன்று திரட்டி
அவன் பெரியவர் பார்க்க போனானாம்..

விலகி போன உறவெல்லாம் 
தேடி வந்து நிற்க
பழி சொன்ன வாயெல்லாம்
பாசம் பொழிய பேச
நாட்கள் பல கடந்து
அன்று நாட்டாமை சிரித்தாராம்..."


பீட்டர் கதை சொல்லி முடிந்ததும், அருவி அவனை பார்த்து என்ன கதை இது என்று கேட்கிறாள், நடக்குற மாறி கதை எடுக்க மாட்டிங்களா என்று கேட்கிறாள். படத்தின் முடிவில் இந்த கதைக்கான காரணத்தை இயக்குனர் நமக்கு புரிய வைக்கிறார்.

அது இருக்கட்டும், இந்த காட்சியில் எனக்கென்ன பாடம் கிடைத்தது?

வேற என்ன, என்றாவது ஒரு நாள் நான் மடல் எழுதி அனுப்பிவைத்தால் எனக்காக ஊரெல்லாம் திரண்டு வர வேண்டாம். ஒரு நாலு பேரு வருவாங்களா என்று அந்த காட்சியை கண்டபின் மனசாட்சி கேட்டது..

இரங்கல் கூட்டத்தில் கூடுகின்ற கூட்டத்தை விடவும், 
இருக்கும் போது நீ அழைக்காமலேயே உனக்காக ஓடி வரும் கூட்டம்தான் 
நீ வாழ்ந்த வாழ்வின் அடையாளம்.


No comments:

Post a Comment