Pages

Tuesday, April 28, 2020

யார் தொடங்குவது...

உன்னை பார்த்து நானும்...
என்னை பார்த்து நீயும்...
புன்னகைப்பதா
என்று யோசித்து முடிப்பதற்குள்
முடிந்து போகிறது...
அதற்கான தருணம்...

மீண்டும் ஒருமுறை
சந்திக்க நேர்ந்தால்...
யோசிக்காமல் எனையழைத்து
உரிமையோடு நலம் விசாரி...
புன்னகையோடு நானும்
நல்ல நலம் என்று சொல்கிறேன்...

No comments:

Post a Comment