Pages

Friday, November 30, 2012

இதயம்....

நினைவோடு போராடிய நாட்கள்  போதும்...
கனவிலும் அவளோடு வாழ்ந்தது போதும்...
காணும் இடமெல்லாம் அவள் பின்பம் கண்டது போதும்..
கவிதையில் அழுதே உன் காலம் போனது போதும்...

தொலைந்த கனவுகளை தேடி தேடியே...
நீ வாழ்வை தொலைத்தது போதுமென்று....
என் இதயமே ஒரு நாள் கேட்டுகொண்டது....

நானும் வேறு வழியின்றி வெறுக்க தொடங்கிவிட்டேன்...
என் இதயத்தை....

Saturday, November 17, 2012

உன்னை தேடி என் கவிதைகள்...

என் ஒட்டு மொத்த கவிதைகளும் சொல்லும்...
என் காதலின் ஆழம்...
அதில் ஒரு கவிதையை கூட நீ வாசிக்காமல் போனது...
என்றோ நான் செய்த பாவம்...
             

பித்தனாய் அலைகிறேனம்மா...

காதல் ஒருவனை கவிஞனாக்கும்...
கிறுக்கனாய் அலைய வைக்கும்...
பேரழிவிலும் சிரிக்க வைக்கும்..
பேரின்பத்திலும் அழ வைக்கும்..
தனிமையில் வாழ வைக்கும்...
தன்னந்தனியே பேச வைக்கும்..

இதில் ஏதேனும் ஒன்று நடந்திருந்தால்
பிழைத்திருப்பேன் பெண்ணே..
அத்தனையும் மொத்தமாய் என்னுள் நடந்ததாலோ என்னவோ....
இன்னமும் உன் நினைவுகளோடு
.. பித்தனாய் அலைகிறேனம்மா...
                  

காவல் தெய்வம்....

எங்களை காப்பாய் என்றுதானே...
உன் கையில் ஆயுதங்கள் கொடுத்து வணங்கினோம்...
அத்தனை ஆயுதங்களையும்...
குத்தகைக்கு விட்டு வாழ்கிறாயா என்ன..

வன்முறையிலும் வழிப்பறி கொள்ளையிலும்..
எங்கள் கழுத்துக்கு நேராக
வீசப்படும் ஆயிதங்கள் எல்லாமே..
உன்னிடம் காவலுக்கு கொடுக்கப்பட்டவைதானே...

Thursday, November 8, 2012

இன்னொரு காதல் கதை...



யாரிடம் சொல்லி வைப்பது..
இந்த காதல் கதையை....

எழுத்துக்குள் அடக்கி எளிதாய் சொல்லும் அளவுக்கு...
நான் காதலிக்கவில்லை....

இதயத்தில் பூட்டி வைத்து இருக்கின்ற நாளை கழிக்க...
நெஞ்சுக்கு சக்தியில்லை...

ஏனென்று சொல்லாமல் நீ என்னை பிரிந்துவிட்டாய்...
யார்வந்து சொன்னாலும் உன்நினைவு பிரியவில்லை....

நீ என்னை மறுத்ததற்கும்...
நான் உன்னை மறப்பதற்கும்...
காரணங்கள் கிடைக்கவில்லை.....

விழியோரமாய் வழியும் கவிதைகள்...

உன்னை நினைத்து நினைத்தே...
கவிதைகள் எழுதி பழகியதாலோ என்னவோ....
இப்போதெல்லாம் உன்னை நினைத்தால் மட்டுமே...
கவிதைகள் பிறக்கிறது...

என்னிடம் கவிதை கேட்கும் யாருக்கும் தெரிவதில்லை...
அந்த கவிதைகள் எழுதப்படுவது...
என் கண்ணீர்த்துளிகளில் என்று...

Thursday, November 1, 2012

கவிதையில் வாழ்கிறேன்...




என் தோழி ஒருத்தி கேட்கிறாள்....
எப்படி எழுதினாய் இத்தனை கவிதைகளை என்று...

நான் கல்லடிப்பட்டு சினம்கொண்டதில்லை...
காயப்பட்டு கண்கலங்கியதில்லை...
காதல் தோல்வியும் எனை உடைத்ததில்லை....
ஏமாற்றங்கள் எனை வதைத்ததில்லை....

உள்வாங்கும் காயங்களை எல்லாம்...
நான் கவிதையாய்தான் பிரசவிக்கிறேன்...
கண்ணீரை விடவும் அதிகமாய்...
இந்த கவிதைகளைத்தான் நம்புகிறேன் பெண்ணே.....