பத்து வயசு சிறுமி
ஆடுவதும் பாடுவதும்...
கைத்தட்டல் வாங்குவதும்
பரிசு வாங்கி போவதும்....
பார்ப்பதற்கு அழகாய்தான் இருக்கிறது....
உதிரிக்காய் பொறுக்குவதிலும்
ஒட்டுப்பால் சேர்ப்பதிலும்....
சிக்கி சீரழிந்து போன
என் எஸ்டேட்டு வாழ்வை நினைத்துப்பார்க்கையில்....
அழுகை தான் வருது....
No comments:
Post a Comment