Pages

Tuesday, August 4, 2009

குறையொன்றுமில்லை....

எட்டு திக்கும் உன் பின்பம்...
எழுதும் கவிதையில் உன் பெயர்...
கனவில் கூட உன் வாசம்...

உனக்கு பிடித்த நிறம்...
நீ விரும்பும் பாடல்...
நீ ரசித்த மழை...

அந்த சாலையோர பாதை...
மரத்தடி நிழல்...
நம் பழைய வகுப்பறை...

உன் வாசம் சொல்லும் கைக்குட்டை...
உன் ரேகை பதிந்த காகிதம்...
நீ தொட்டுச்சென்ற என் புத்தகம்...
விட்டுச்சென்ற உன் பேனா...

இத்தனையும் உடனிருக்க...
ஒவ்வொன்றிலும் நீயிருக்க...
வேறென்ன வேண்டும் பெண்ணே
இந்த ஏழை வாழ்வதற்கு...

புன்னகை பூ...

உன் உயிர் நாடி அறுக்கப்பட்டு...
மரணம் வரை சென்ற பின்னும்...
அழகாக புன்னகைக்கிறாயே...

பெண்ணின் கூந்தல் சேரும் கர்வத்திலா...
ஆண்டவன் பாதம் சேரும் ஆனவத்திலா....

Tuesday, February 3, 2009

வியத்தில் நீ...
காவியத்தில் காதல்...
கல்லறையில் நான்..

வாழும் வரை நினைத்திருப்பேன்...

உன்னை மறந்திட
என்னிதையம் நினைக்குதம்மா...
மதிகெட்ட மடநெஞ்சம்
உன்னினைவை துறக்குதம்மா...

நெஞ்சில் கூடுகட்டி
பொத்திவைத்த நினைவெல்லாம்...
கூட்டை உடைத்து
வெளியேறி போகுதம்மா...

நிலவு தேய்ந்திடலாம்
நினைவுகள் தேய்ந்திடுமா?
காதல் தந்த கனவுகள்
கண்ணை விட்டு போய்விடுமா?

கடைசி மூச்சிவரை
காத்திருக்க போவதாய்...
எழுதிவைத்த கவிதையெல்லாம்
பொய்யாகி போய்விடுமா?

உன்னோடு வாழ்ந்திட
வழியில்லை என்றபின்னும்...
உன் நினைவோடு வாழ்வதாய்
நெஞ்சிக்கு சொல்லிவைத்தேன்...

நினைவை சுமந்துவாழ
நெஞ்சம் மறுக்குதம்மா...
உன்னை மறக்கச்சொல்லி
என்னை வருத்துதம்மா...

காலம் தன் வாளெடுத்து
நினைவுகளை வேட்டையாட...
காதலின் கால்தடம்
ஒவ்வொன்றாய் மறையுதம்மா...

நீ விட்டுச்சென்ற கால்தடத்தில்
நடைபழகி பார்த்ததும்...
தொட்டுச்சென்ற பொருளையெல்லாம்
சேர்த்துவைத்த நாட்களும்...

காலமெல்லாம் என் நெஞ்சில்
நிலைத்திருக்க கூடாத...
நினைவோடு வாழ்வதெல்லாம்
நிஜவாழ்வில் நடக்காத...

மறக்கத்தான் வேண்டுமென்று
விதியொன்று இருக்குமென்றால்...
அன்றே நான் இறப்பதும்
விதியென்று செய்திடுவேன்...

வாழும்வரை உந்தன்
நினைவுகள் சுமந்திருப்பேன்...
என் கடைசி கவிதையிலும்
உன் பேரெழுதி வைத்திருப்பேன்...

Saturday, January 31, 2009

சொன்னவள் நீதான்...

எவர் வந்து தடுத்தாலும்...
எனை பிரிய மாட்டேன் என்றும்...
உயிர் பிரியும் நாள் வரைக்கும்...
எனை தொடர்ந்து வருவேன் என்றும்...
சொன்னவள் நீதான்...


நானின்றி உன்னிதையம்...
இயங்காமல் நிற்குமென்றும்...
நம் காதல் பிரியுமென்றால்...
அந்த நொடி இறப்பேனென்றும் ...
சொன்னவள் நீதான்...


சாதியின் பேர் சொல்லி
உன் அப்பன் சட்டை பிடிக்க...
கௌரவம் போனதென்று
உன் அன்னை உன்னை தடுக்க...


பெத்தாங்க வளர்த்தாங்கன்னு
பழைய கதை சொல்லி நீயும்
எனை விட்டுப் போனபின்னே...


இல்லாது போன காதலால்
இயங்காமல் இதயம் நிற்க
இருக்கின்ற வரையிலும் உன்னினைவில் வாடி...
இறக்கின்ற நொடியிலும் உன்பேரை பாடி...
நீ சொல்லி வைத்ததுபோல்
இறப்பதென்னவோ நான்தான்..


Saturday, January 17, 2009

பத்திரப்படுத்தி வை...

இப்போதே பத்திரப்படுத்தி வை...
என் முகம் பதிந்த
ஏதேனும் ஒரு புகைப்படத்தை...

என் முகமோ முகவரியோ...
நீ முதலில் மறக்கப்போவது
எதுவென்று தெரியவில்லை...

சிரித்துப் பேசிய நாட்களை
நினைத்துப் பார்க்கவும்
நேரமிருக்குமோ தெரியவில்லை...

பழைய கவிதைகளோ...
பகிர்ந்துகொண்ட கதைகளோ...
பார்த்து பேசிய இடங்களோ...

ஏதேனும் ஒன்று
என்றாவது ஒருநாள்
என்னை நினைவுபடுத்தக் கூடும்...

என் கல்யாண செய்தியோ...
கருமாதி செய்தியோ...
என்றாவது ஒருநாள்
உன் வாசல் வரக்கூடும்...

அப்போது தூசு தட்டி பார்க்க
ஒரு புகைப்படம் தேவைப்படும்...

இப்போதே பத்திரப்படுத்தி வை...
என் முகம் பதிந்த
ஒரு புகைப்படத்தை...

தமிழ்ப்பள்ளி வேண்டும்

கவிஞன் ஒருவன் கதறுகிறான்
காதலால் கவிஞனானவன்
காகிதம் முடிந்து போய்
காற்றிலும் கவியெழுதி வைத்தான்
ஆனால் காதலி வாசிக்கவில்லை

பாவம்
அவள் என்ன செய்வாள்
அவள் படித்தது மலாய்ப்பள்ளியில்....

Friday, January 16, 2009

......

இடியும் மின்னலும்
உன் கண்களிலிருந்து தானே பாய்கிறது...

மழை மட்டும் ஏனோ...
என் கண்ணில் தூறுது??

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

இந்த வாழ்த்தை நீ எதிர்பார்த்தாயோ என்னவோ...
இருந்தும் நான் வாழ்த்துகிறேன்...

பூமியின் அடுத்த சுற்றில் ..
இதே நாள் மீண்டும் பிறக்கும் போது...
முதல் வாழ்த்து சொல்ல நானும்...
இந்த பழைய தோழனை நீயும்...
மறந்திருக்க கூடும்...

இனிமேலும் நினைவுகளை காப்பாற்றி வைக்கவும்...
நினைவூட்டி பார்க்கவும்...
என் கவிதைகளுக்கு சக்தியில்லை பெண்ணே...

இப்போதே வாழ்த்தி செல்கிறேன் ...
என் ஆயுளையும் கடந்து வரும்படி...
நூறாண்டுக்குரிய வாழ்த்தை...
ஒற்றை வரியில் சொல்கிறேன்...

புத்தாண்டு வாழ்த்துக்கள்....