உன்னை மறந்திட
என்னிதையம் நினைக்குதம்மா...
மதிகெட்ட மடநெஞ்சம்
உன்னினைவை துறக்குதம்மா...
நெஞ்சில் கூடுகட்டி
பொத்திவைத்த நினைவெல்லாம்...
கூட்டை உடைத்து
வெளியேறி போகுதம்மா...
நிலவு தேய்ந்திடலாம்
நினைவுகள் தேய்ந்திடுமா?
காதல் தந்த கனவுகள்
கண்ணை விட்டு போய்விடுமா?
கடைசி மூச்சிவரை
காத்திருக்க போவதாய்...
எழுதிவைத்த கவிதையெல்லாம்
பொய்யாகி போய்விடுமா?
உன்னோடு வாழ்ந்திட
வழியில்லை என்றபின்னும்...
உன் நினைவோடு வாழ்வதாய்
நெஞ்சிக்கு சொல்லிவைத்தேன்...
நினைவை சுமந்துவாழ
நெஞ்சம் மறுக்குதம்மா...
உன்னை மறக்கச்சொல்லி
என்னை வருத்துதம்மா...
காலம் தன் வாளெடுத்து
நினைவுகளை வேட்டையாட...
காதலின் கால்தடம்
ஒவ்வொன்றாய் மறையுதம்மா...
நீ விட்டுச்சென்ற கால்தடத்தில்
நடைபழகி பார்த்ததும்...
தொட்டுச்சென்ற பொருளையெல்லாம்
சேர்த்துவைத்த நாட்களும்...
காலமெல்லாம் என் நெஞ்சில்
நிலைத்திருக்க கூடாத...
நினைவோடு வாழ்வதெல்லாம்
நிஜவாழ்வில் நடக்காத...
மறக்கத்தான் வேண்டுமென்று
விதியொன்று இருக்குமென்றால்...
அன்றே நான் இறப்பதும்
விதியென்று செய்திடுவேன்...
வாழும்வரை உந்தன்
நினைவுகள் சுமந்திருப்பேன்...
என் கடைசி கவிதையிலும்
உன் பேரெழுதி வைத்திருப்பேன்...
No comments:
Post a Comment