என் கவிதைக்கு யாரும்
காரணங்கள் தேட வேண்டாம்...
நான் வசந்த காலத்திலும்
வறுமை பற்றி எழுதுவேன்...
கல்யாண மேடையிலும்
காதல் தோல்வியை பாடுவேன்...
காவி உடை அணிந்தபின்னும்
கடவுள் கல்லென்று சொல்வேன்..
என் கவிதைகளுக்கு யாரும்..
காரணங்கள் தேட வேண்டாம்..
அர்த்தம் புரிந்தாலே போதும்...
No comments:
Post a Comment