Pages

Saturday, July 21, 2012

முகநூல்....



நீ உயிரோடு இருக்கும் போதே....
உன் முகபுத்தகத்தை மூடிவிடுதல் நல்லது....
இல்லையென்றால் உன் இரங்கல் கூட்டம்...
இங்கேயே நடந்து முடிந்துவிடும்...

புல்லாங்குழல்..

  
வாழ்க்கை ஒரு புல்லாங்குழல் போல...
காதை வருடும் இன்னிசை பிறப்பது இங்கேதான்...
அறுக்கப்பட்ட ஒரு மூங்கிலின் சோகமும்
இங்கேதான்...

Monday, July 2, 2012

வாழ்ந்துதான் பார்ப்போமே...


வறுமை தானே... பழகிக்கொள்வோம்....
பசித்தால் என்ன... பகிர்ந்து உண்ணுவோம்....
ஏமாற்றமா.... எதிர்கொள்வோம்....
அவமதிப்பா..... தாங்கிக்கொள்வோம்.....

வாழ்க்கை வலிக்கத்தான் செய்கிறது...

வாழ்ந்துதான் பார்ப்போமே...
இதற்கெல்லாமா கடவுளை அழைப்பது....

ஈழத்தின் கொடுமை பார்த்தே இறங்கி வராத கடவுள்...

உனக்கும் எனக்குமா வந்துவிட போகிறார்....