Pages

Saturday, June 23, 2012

தொலைந்த கனவுகள்...


பத்து வயசு சிறுமி
ஆடுவதும் பாடுவதும்...
கைத்தட்டல் வாங்குவதும்
பரிசு வாங்கி போவதும்....
பார்ப்பதற்கு அழகாய்தான் இருக்கிறது....

உதிரிக்காய் பொறுக்குவதிலும்

ஒட்டுப்பால் சேர்ப்பதிலும்....
சிக்கி சீரழிந்து போன
என் எஸ்டேட்டு வாழ்வை நினைத்துப்பார்க்கையில்....
அழுகை தான் வருது....

Sunday, June 3, 2012

பாழாய் போன வறுமை


வயித்துப்பசியில் கூட பெரிதா ஒன்னும் வலிக்கவில்லை....
பெத்தவ வைத்திய செலவுக்கு வழியில்லாம தவிச்சபோதுதான்
அதிகமா வலிச்சது...
இந்த பாழாய் போன வறுமை.....