Pages

Tuesday, May 25, 2010

கனவொன்று கண்டேன்


கனவொன்று கண்டேன் பெண்ணே....

உன்னோடு கை கோர்த்து...

வெகுதூரம் போவதுபோல்....

கனவொன்று கண்டேன் பெண்ணே....


கனவென்று தெரியும் பெண்ணே....

உன்னோடு வாழ்வதாய் நான் கொண்ட ஆசையெல்லாம்....

வெறும் கனவென்று தெரியும் பெண்ணே...


கனவொன்று உள்ளது பெண்ணே...

நித்தம் நித்தம் உன்னை நினைத்து...

பித்தனாய் உந்தன் பேர் சொல்லி அலைந்து....

உன் நினைவில் நனைந்து இவ்வுலகம் மறந்து...

முதுமையிலும் இந்த முதல் காதல் வலியோடு...

மூச்சை விட வேண்டுமென்று...

கனவொன்று உள்ளது பெண்ணே...


கனவாகி போகாது பெண்ணே....

இன்னொரு தாயாக வந்தவள் உன்னை....

இதய துடிப்பில் வாழ்கின்ற உன்னை...

முதல் காதல் தந்த நாயகி உன்னை...

நாள்தோறும் நினைத்து நான் வாழும் வாழ்க்கை....

கனவாகி போகாது பெண்ணே....

No comments:

Post a Comment