Pages

Tuesday, May 25, 2010

கனவொன்று கண்டேன்


கனவொன்று கண்டேன் பெண்ணே....

உன்னோடு கை கோர்த்து...

வெகுதூரம் போவதுபோல்....

கனவொன்று கண்டேன் பெண்ணே....


கனவென்று தெரியும் பெண்ணே....

உன்னோடு வாழ்வதாய் நான் கொண்ட ஆசையெல்லாம்....

வெறும் கனவென்று தெரியும் பெண்ணே...


கனவொன்று உள்ளது பெண்ணே...

நித்தம் நித்தம் உன்னை நினைத்து...

பித்தனாய் உந்தன் பேர் சொல்லி அலைந்து....

உன் நினைவில் நனைந்து இவ்வுலகம் மறந்து...

முதுமையிலும் இந்த முதல் காதல் வலியோடு...

மூச்சை விட வேண்டுமென்று...

கனவொன்று உள்ளது பெண்ணே...


கனவாகி போகாது பெண்ணே....

இன்னொரு தாயாக வந்தவள் உன்னை....

இதய துடிப்பில் வாழ்கின்ற உன்னை...

முதல் காதல் தந்த நாயகி உன்னை...

நாள்தோறும் நினைத்து நான் வாழும் வாழ்க்கை....

கனவாகி போகாது பெண்ணே....

Saturday, May 22, 2010

கனவே கலையாதே...

கனவொன்று உள்ளது பெண்ணே....
நித்தம் நித்தம் உன்னை நினைத்து...
பித்தனாய் உந்தன் பேர் சொல்லி அலைந்து...
காதல் காதலென்று கவிதைகள் பாடி...
வாழ்நாள் முழுவதும் உன் வாசம் தேடி...
முதுமையிலும் இந்த முதல் காதல் வலியோடு...
மூச்சை விட வேண்டுமென்று...

கனவொன்று உள்ளது பெண்ணே.......

Saturday, March 27, 2010

நீயில்லாமலே...



நீயில்லாமலே கடந்து போனது...
எத்தனையோ காலம்....

உன்னை நினைக்காமல் முடிந்ததில்லை...
எந்த ஒரு நாளும்....

Tuesday, March 23, 2010

சாபம்


சாபம் ஒன்று வாங்கி வந்தேன் பெண்ணே...
சாகும் வரை நினைத்திருப்பேன் உன்னை............

Wednesday, March 3, 2010

நீ......

நினைவுகளில் நீ...
நித்திரையில் நீ...
நிம்மதியும் நீ...
நிரந்தரமாய் நீ...

கனவுகள் நீ...
கண்ணீரும் நீ...
காணாத தூரத்தில் நீ...
காணும் இடமெல்லாம் நீ....

சத்தத்தில் நீ...
சங்கீதம் நீ...
சலங்கை ஒளியும் நீ...
சவுக்கடியும் நீ...

இயற்க்கை அழகிலும் நீ...
இலைகளின்
பசுமையில் நீ...
இடியின்
சத்தத்திலும் நீ... இரவின் நிசப்த்தத்திலும்
நீ..

கவிதை தந்தவள் நீ... கவிதையின் வாசத்தில்
நீ...
கவிதையாய் வாழ்பவளும் நீ...
அந்த கவிஞனை கொன்றவலும் நீ....