Pages

Thursday, June 2, 2016

பெத்தவள் நான் தான்

இங்க ஒருத்தன 
வேரறுத்து கொன்னுட்டாங்க
யாரும் அழுவுல
யாருக்கும் வலிக்கல
யாருமே துடிக்கல
அவன் இறங்கல் கூட்டத்துக்கு பாவம்,
கூட்டமே கூடல

நாய் ஒன்னு செத்தா கூட
பரிவு காட்டும் ஊருக்குள்ள
நாதியத்து செத்து கிடக்கும்
இவன பார்க்க யாரும் இல்ல

நல்லா வாழ்ந்தவன
யார் யாரோ வந்து
நடுத்தெருவுக்கு இழுத்து
ஏறி மிதிச்சி கொன்னாங்க

கொன்னுபோட்ட கூட்டமெல்லாம்
குற்ற உணர்வும் இல்லாம
ஆடுறாங்க பாடுறாங்க
நல்லா தான் வாழுறாங்க

பெத்தவ மட்டும்தான் 
வீதியில அழுவுறா
பிள்ளைய சுமந்துகிட்டு
நீதிகேட்டு அலையுறா
பிள்ள போன இடத்துக்கே
தானும் போக துடிக்குறா
சாமியெல்லாம் செத்துச்சினு
சாபம்விட்டு கதறுறா

ஒருபுள்ள போனதுனா
மறுபுள்ள பெறுவதெல்லாம்
வாழ்க்கையில வழக்கமுன்னு
ஊர் உலகம் சொன்னபோதும்
வேற புள்ள நானும் கொண்டா
இந்த புள்ள வச்ச பாசம்
பொய்யாகி போகும்முன்னு
சொல்லி சொல்லி அழுவுறா
சோகத்தீயில் வேகுறா

ஒரு நாள் இல்ல ஒரு நாளு
என் புள்ள வாழ்வுக்கு
அர்த்தமொன்னு கிடைக்குமுன்னு
செத்த புள்ள சவத்தின் மேல
சத்தியம் செஞ்சி போகுறா
ஒத்தையில அந்த தாயி
தனிமரமா வாழுறா

செத்தது என் காதல்
பெத்தவள் நான் தான்..

ஆசிரியர் தினம்


வாழ்க்கை


கல்யாண பத்திரிகை