Pages

Monday, September 26, 2016

அரசியல்வாதிகளே

அரசியல்வாதிகளே
காலம் காலமாய் போக்குவரத்தை
விலக்கி ஒதுக்கி
விரைந்து போகின்றீர்கள்
போகின்ற இடத்துக்கு
காலம் தவறாமல் போவது நல்லதுதான்
அப்படியே கொஞ்சம்
கடமை தவறாமல் உழைத்தாலும் நல்லது

Thursday, September 8, 2016

காதலித்து பார்


பல்லு வலி...

உறக்கம் இல்லா இரவுகள்
உறங்க மறுக்கும் விழிகள்
புரண்டு புரண்டு படுத்தாச்சி
தலையே சுற்றி போயாச்சி
கண்ணை கட்டியும் படுத்தாச்சி
கவிதை கூட எழுதியாச்சி

என்ன பாடு பட்டாலும்
தூக்கம் வந்த பாடில்லை
இளையராஜா பாட்டு கூட
இமைகள் மூட உதவவில்லை

காதல் எல்லாம் ஒன்றுமில்லை
ரெண்டு நாளா பல்லு வலி...

'போக்கிமோன்'

அவளை நெனச்சி
பித்து பிடிச்சி
கவிதையா வடிச்சி
இறந்த காலத்த
நெனச்சி நெனச்சி
பைத்தியமா அலைவதை விட

பேசாமல் நானும்
'போக்கிமோன்' பிடிக்க போயிருக்கலாமோ?

Thursday, June 2, 2016

பெத்தவள் நான் தான்

இங்க ஒருத்தன 
வேரறுத்து கொன்னுட்டாங்க
யாரும் அழுவுல
யாருக்கும் வலிக்கல
யாருமே துடிக்கல
அவன் இறங்கல் கூட்டத்துக்கு பாவம்,
கூட்டமே கூடல

நாய் ஒன்னு செத்தா கூட
பரிவு காட்டும் ஊருக்குள்ள
நாதியத்து செத்து கிடக்கும்
இவன பார்க்க யாரும் இல்ல

நல்லா வாழ்ந்தவன
யார் யாரோ வந்து
நடுத்தெருவுக்கு இழுத்து
ஏறி மிதிச்சி கொன்னாங்க

கொன்னுபோட்ட கூட்டமெல்லாம்
குற்ற உணர்வும் இல்லாம
ஆடுறாங்க பாடுறாங்க
நல்லா தான் வாழுறாங்க

பெத்தவ மட்டும்தான் 
வீதியில அழுவுறா
பிள்ளைய சுமந்துகிட்டு
நீதிகேட்டு அலையுறா
பிள்ள போன இடத்துக்கே
தானும் போக துடிக்குறா
சாமியெல்லாம் செத்துச்சினு
சாபம்விட்டு கதறுறா

ஒருபுள்ள போனதுனா
மறுபுள்ள பெறுவதெல்லாம்
வாழ்க்கையில வழக்கமுன்னு
ஊர் உலகம் சொன்னபோதும்
வேற புள்ள நானும் கொண்டா
இந்த புள்ள வச்ச பாசம்
பொய்யாகி போகும்முன்னு
சொல்லி சொல்லி அழுவுறா
சோகத்தீயில் வேகுறா

ஒரு நாள் இல்ல ஒரு நாளு
என் புள்ள வாழ்வுக்கு
அர்த்தமொன்னு கிடைக்குமுன்னு
செத்த புள்ள சவத்தின் மேல
சத்தியம் செஞ்சி போகுறா
ஒத்தையில அந்த தாயி
தனிமரமா வாழுறா

செத்தது என் காதல்
பெத்தவள் நான் தான்..

ஆசிரியர் தினம்


வாழ்க்கை


கல்யாண பத்திரிகை