Pages

Tuesday, October 11, 2011

கல்லாகத்தான் இருக்கிறாள்....


பூமியும் பெண்ணென்றார்கள்...
சாமியும் பெண்ணென்றார்கள்....



என் தமிழச்சி மார்பறுத்து கொல்லப்பட்டபோது...
பூமிக்கும் வலிக்கவில்லை....
சாமியும் கேட்கவில்லை....


பதறி அழுவதெல்லாம் நாம் மட்டும்தான் தோழரே....
பராசக்தி இன்னும் கல்லாகத்தான் இருக்கிறாள்....

Sunday, October 2, 2011

கவிதையாய் சொல்லவைத்தாய்





காதலின் காயத்தை கூட கவிதையாய் சொல்லவைத்தாய்...
விழிகள் சிந்திய கண்ணீர் துளியில் கவிதை எழுத கற்றுத்தந்தாய்....

நான் விழுந்து கிடந்த நொடிகளில் எல்லாம்
கவிதை பாடி எழுந்தேன் உன்னால்..

இருளில் கிடந்து தவித்த நொடியில்
கவிதை ஏற்றி நடந்தேன் உன்னால்....

வறுமை பார்த்தேன்... கவிதை சொன்னேன்...
தோற்றுப்போனேன்... கவிதை சொன்னேன்...
தனிமை கொண்டேன்... கவிதை சொன்னேன்..
வலியில் துடித்தேன்.... கவிதை சொன்னேன்...

இப்படியாக எனக்குள் என்னைவிட அதிகமாய்...
கவிதை நிறைந்து போனது என்னவோ
உன்னால் தானே பெண்ணே....

Friday, September 2, 2011

மழைபெய்த காலம்...





அது ஒரு காலம் பெண்ணே...

குடை பிடித்து நீ வந்தாய்
.... 
உன் முகம் தழுவ முடியா மழைத்துளிகள்...
உன் காலடியில் விழுந்து அழுதன....

கையில் இருந்த குடையை... 

அந்த மழைத்துளிக்கு பரிசளித்து...
உன் குடைக்குள்ளே இடம்கேட்டு வந்தேன்....

அந்த மழைநாளில் நம்மை...

அவ்வளவு நெருக்கமாய் சேர்த்து வைத்த பெருமை...
உன் சின்ன குடைக்குத்தானே சேரும்....

அது ஒரு காலம் பெண்ணே...

மனதோடு மழைபெய்த காலம்...

Sunday, May 1, 2011

நிஜம்தானா?



ஈழத்தில் என் தமிழச்சி...

துகிலுரிக்கப்பட்ட போது...

எந்த கண்ணனும் சேலை கொடுத்து...

அவள் மானம் காக்கவில்லையே...


பாட்டி வடைசுட்ட கதைபோல....

அந்த மகாபாரதமும் வெறும் கதைதானோ....